logo

+91 94437 22006 | info@bhashyam.org

प्रशिक्षणम्

Prasikshana Shibiram

In order to spread the language far and wide we require instructors to impart training in basic spoken skill in Samskritam. With this aim we conduct annual Prasikshana Sibiram (Trainers training camp) during the month of May. This camp will be a fully residential for a period of 12 days. Those who have attained fluency through our basic classes can attend this camp. They will be trained on the teaching methodology, public relation and organizational matters.

We expect around 200 participants from all over Tamilnadu to attend this camp every year. Arrangements for food, accommodation will have to be done.

Salient features of Prashikshanam Varga

  • 100% Samskrita Atmosphere
  • New methods of teaching technique
  • Science in Samskritam - Exhibition
  • Language games
  • Attractive songs
  • Yoga
  • Samskrit grammar classes
  • Inspirational speeches
  • Familiarizing our culture
  • Personality development programmes
  • Homely atmosphere

ஶிக்ஷகப்ரசிக்ஷண சிபிரம்

ஶிக்ஷகப்ரசிக்ஷண சிபிரம்

ஒவ்வொரு வருடம் சிக்ஷக ப்ரசிக்ஷண சிபிரம் என்கின்ற வருடாந்திர 12 நாள் உறைவிட முகாம் மே மாதம் நடைபெறுகிறது. ஸம்ஸ்க்ருத மொழியை பரப்புவதற்கு பேச்சு பயிற்சி வகுப்புகளை நடத்தும் பயிற்சியாளர்கள் தேவைப்படுகின்றனர். இந்நோக்கத்துடன் வருடந்தோறும் மே மாதத்தில் பயிற்றுனர் பயிற்சி முகாம் 12 நாள் தொடர்ந்து உண்டு உறைவிட முகாமாக நடத்தப்படுகிறது. எங்களது பேச்சு பயிற்சி வகுப்புகளில் பங்கேற்று தேர்ந்தவர்கள் மட்டுமே இந்த முகாமில் கலந்து கொள்ள இயலும். இம்முகாமில் கலந்து கொள்பவர்களுக்கு கற்பித்தல் திறன் மேம்பாடு, மக்கள் தொடர்பு மற்றும் அமைப்பு சம்பந்தப்பட்ட விஷயங்கள் கற்பிக்கப்படும்.

ஒவ்வொரு வருடமும் ஏறத்தாழ 200 பேர்களைக் கொண்டு நடைபெறும் இந்த வகுப்பில் கலந்துகொள்பவர்களுக்கு உணவு மற்றும் உறைவிட வசதி செய்து தரப்படும்

ப்ரஶிக்ஷண சிபிரத்தின் உட்கூறு

  • 100 சதவீத ஸம்ஸ்க்ருத சூழல்
  • புதிய முறையிலான கற்றல் உதவி
  • ஸம்ஸ்க்ருதத்தில் அறிவியல் கண்காட்சி/li>
  • மொழிவிளையாட்டு
  • கவர்ந்திழுக்கும் பாடல்
  • யோகா
  • ஸம்ஸ்க்ருத இலக்கண வகுப்புகள்
  • ஆன்மீகச் சொற்பொழிவுகள்
  • நமது பண்பாட்டின் அறிமுகம்
  • ஆளுமை முன்னேற்றம்
  • குடும்பச் சூழல்

BHASHA BODHANA VARGA

To enable those who learned Samskritam through basic classes attain spoken provenience, we conduct short term residential camp of 3 to 7 days duration. The participants are persuaded to speak in Samskritam and gain confidence. These camps are conducted at zonal level consisting of 3 to 4 districts.

பாஷா போதன வர்க்கம் (மொழிப்பயிற்சி வகுப்புகள்)

ஸம்ஸ்க்ருத மொழியில் அடிப்படைப் பயிற்சி உள்ளவர்களின் உரையாடல் திறனை மேம்படுத்தும் வகையில், 3-7 நாட்கள் வரையிலான குறுகிய கால வகுப்புகளை நடத்துகிறோம். வகுப்புகள் நடக்கும் இடங்களிலேயே தங்கும் வசதிகள் உண்டு. இவ்வகுப்புகளில் கலந்து கொள்பவர்கள் ஸம்ஸ்க்ருதத்தில் உரையாட ஊக்குவிக்கப்படுகிறார்கள். அதனால், அவர்களது தன்னம்பிக்கை மேம்படுகிறது. இத்தகைய குறுகியகால வகுப்புகள் மண்டல அளவில் நடத்தப்படுகின்றன. (ஒவ்வொரு மண்டலமும் 3 அல்லது 4 மாவட்டங்களைக் கொண்டது).